இணையம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலகளாவிய இணைய
வலையின் ஒரு சிறு பகுதி
இணையம் (Internet) என்பது உலக அளவில் பல கணினி வலையமைப்புகளின் கூட்டு இணைப்பு ஆன
பெரும் வலையமைப்பைக் குறிக்கும். இவ்விணையத்தில் தரவுப் பறிமாற்றமானது முன்னும் பின்னும்
அடையாளம் சேர்க்கப்பட்ட தரவுத்தொடர்களாக (பாக்கெட்
சுவிட்சிங்) இணையத்தில் உலா வர செய்யப்பட்ட நெறிமுறைகளைப் பின்பற்றி
நடைபெறும். இணையம் என்னும் சொல்லானது செப்புக்கம்பிகளினாலும், ஒளிநார் இழைகளினாலும் இணைக்கப்பட்டுள்ள
கணினிவலைகளின் பேரிணைப்பைக் குறிக்கும். உலகளாவிய வலை (world wide web) என்பது உலகளாவிய முறையில் இணைப்புண்ட கட்டுரைகள், எழுத்துக்கள், ஆவணங்கள், படங்கள், பிற தரவுகள் முதலியவற்றைக் குறிக்கும்.
எனவே இணையம் என்பது வேறு உலகளாவிய வலை என்பது வேறு. இணையத்தில் பல்லாயிரக்கணக்கான
சிறிய வணிக, கல்வி நிறுவன, தனி நபர் மற்றும் அரசு சார்
கணினி-வலையமைப்புகள் இதன் உறுப்புகளாவன. மின்னஞ்சல், இணைய உரையாடல், மற்றும் ஒரு கட்டுரையில் இருந்து
மற்றொன்றிற்கு மீயிணைப்புகள் மூலம் உலவல் வழி தொடர்புபடுத்தப்பட்ட இணையத்தளங்கள் முதலிய சேவைகளையும், உலகளாவிய வலையின் தரவுகளையும் இணையம் தருவிக்கின்றது.
வரலாறு
1950-ம் ஆண்டிற்கு
அண்மையில் தொடர்பியல் ஆய்வாளர்கள் கணினி மற்றும் பல்வேறு தொலைத்தொடர்பு
வலையமைப்பின் பயனர்கள் பொதுவான தொடர்பு மற்றும் தகவல் பரிமாற்றம் கொள்ள ஆவன செய்ய
வேண்டும் என எண்ணினர். இதன் விளைவாக மையக் கட்டுப்பாடற்ற வலையமைப்புகள், வரிசைப்படுத்துதல் முறைகள், மற்றும் தரவுப்பொதி
நிலைமாற்றம் போன்ற துறைகளில் ஆய்வு செய்யத் துவங்கினர்.
முதலாவது TCP/IP முறையிலமைந்த வலையமைப்பானது ஐக்கிய அமெரிக்காவின் நேஷனல் சயன்ஸ் பவுண்டேசனில் ஜனவரி 1 1983 முதல் இயங்க ஆரம்பித்தது.
1990களில் இது
பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. இக்காலப்பகுதியில் உருசியாவில் உள்ள சேர்னோபில் அணுஆலை வெடிப்பு மக்களை விஞ்ஞானிகள்
ஒன்றாக இயங்கவேண்டும் என்ற கருத்துக்களை முன்வைத்தது. பிரான்ஸ் ஸ்விட்சலாந்து எல்லையிலிருந்த சேர்னோபிலில் உலகளாவிய
வலை பிரசித்தமடைந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் டிம் பேர்ணர்ஸ்-லீ எச்டிஎம்எல் (HTML) மெருகூட்டும் மொழி, எச்டிடிபீ (HTTP) என்னும் அனுமதிக்கப் பட்ட அணுகுமுறைகளை
கொண்ட புதிய அணுஆய்வுகளுக்கான ஐரோப்பிய அமைப்பின் (CERN சேர்ண்) இணையத் தளமானது உருவாக்கப் பட்டது.
ஜூன் 30 2006-ல்
உலகம் முழுவதும் நூறு கோடி மக்களுக்கும் மேல் இணையத்தை உபயோகம் செய்கிறார்கள். Internet
World Stats
இணையம் எப்படி செயல்படுகின்றது
அடிப்படையில்
இணையமானது ஒரு வழங்கி (Server) மற்றும் வாங்கிக்குமான (Client) தகவல் தொடர்பாகும். இந்த தொடர்பானது TCP/IP என்னும் இணைய நெறிமுறை மூலம் நடைபெறுகிறது. பின்வரும்
நிகழ்வுகள் ஒரு வாங்கிக்கும் வழங்கிக்கும் நடைபெறுவதாக கொள்ளலாம்.
இணையத்தில் உள்ள
ஒவ்வொரு கணிப்பொறிக்கும் எண்களைக்கொண்டு XXX.XXX.XXX.XXX என்னும் முறையில் அடையாளக்குறியீடு கொடுக்கப்படும்.இதனை இணையவிதிமுறை இலக்கம் (IP ) என்பர். இத்தகய இலக்கமுறை மனிதன் கையாள்வது சிரமம் என்பதால்
'இடங்குறிப்பி' உரலி இலக்கத்தை குறிக்க பயன் படுகிறது.
உரலியை கொண்டு இணையத்தில் உள்ள கோப்பை அணுகும் முறையை , களப்
பெயர் முறைமை (Domain Name
System) என்பர்.
அடுக்குவரிசையான
டொமைன் பெயர் முறைமை, மண்டலங்களாக ஒழுங்குபடுத்தப்பட்டு, ஒவ்வொன்றும் ஒரு பெயர் செர்வரால்
சேவையாற்றப்படுகிறது.
- உலகின் ஒரு மூலையில் இருந்து பயனர் உலவியில், உரலியை (ஒருசீர் வள இடங்குறிப்பி) பதிவிடுகிறார்
- உலவியானது உரலியை , தான் நிறுவபட்டிருக்கும் கணணியில் இணையவிதிமுறை இலக்கம் (IP Number) தற்காலிக நினைவில் உள்ளதா என தேடுகிறது.இச்சேவையை செய்யும் மென்பொருட்களை பொதுவாக Nameserver என்று அழைக்கபடும்.
·
hosts என்னும் கோப்பு இங்கு கையாளப்படுகிறது.
இது /etc/hosts (க்னூ/லினக்ஸ்) அல்லது C:\Windows\System32\drivers\extra\hosts
(மைக்ரோசாப்ட்
வின்டோஸ்) என்னும் இடத்தில் இருக்கும். இயக்கு தளம் உலவிக்கு புரியும் உதவியாக இதை
கொள்ளளாம்.இந்த கோப்பில் இணையவிதிமுறை இலக்கம் இல்லாவிட்டால் உலவியானது தனக்கு அருகில்
உள்ள கணணியோடு தொடர்பு கொண்டு தேடும்.
·
ISP எனப்படும் இணையச்
சேவை வழங்கிகள் இங்கு பங்காற்றும்.ISP தனித்தோ , குழுவாகவோ
செயல்பட்டு உரலியை இலக்கமாக தீர்க்கும்.
- Nameserver ஒரு வழியாக ta.wikipedia.org ன் இணையவிதிமுறை இலக்கம், 208.80.152.2 என்பதை உலவிக்கு தெரிவிக்கும்.இப்படியாக களப் பெயர் முறையில்(Domain Name System) ta.wikipedia.org இருப்பிடம் அறியப்படுகிறது.
- உலவி இனி 208.80.152.2 முகவரியாக கொண்ட வழங்கியை இணையத்தில் தொடர்பு கொள்ள முயலும்.
- அடுத்து உலவி 208.80.152.2 எண் முகவரிக்கு GET w/index.php HTTP/1.0 என்னும் கட்டளையை பிறபிக்கும்.இக்கட்டளையானது துண்டங்கள் ஆக (Packets) மாற்றப்படும்.
இத்துண்டத்தில் அனுப்புனர் முகவரி (Sender Address) , பெறுபனர் முகவரி (Receiver Address) மற்றும் படலை
(கணினி) (Port) குறிப்பிடபட்டிருக்கும்.துண்டங்கள்
பொதுவாக பின்வருமாறு இருக்கும்.
- துண்டங்களை, இயக்கு தளம் ஏற்றுக்கொண்டு, அவற்றை திசைவியிடம் கொடுக்கும்.
- திசைவி துண்டங்களை பெற்று , பிற திசைவிகளுடன் தொடர்பு கொண்டு 208.80.152.2 எண் உள்ள வழங்கியிடம் பயனர் உலவியில் இருந்து பிறப்பிக்கபட்ட துண்டங்களை ( GET w/index.php HTTP/1.0 ) சேர்க்கும்.
- வழங்கி துண்டங்களை ஆய்ந்து /wiki/ என்னும் இடத்தில் உள்ள இணையம் என்னும் கோப்பை அனுப்புவதற்கு தயார் செய்யும்.
- வழங்கியிடம் இருந்து வந்த துண்டங்களில் Accept-Encoding: gzip, என்னும் துணுக்கு (DATAGRAM) இருப்பதால் , வாங்கி gzip வகையாறா கோப்புகளை கையாளும் என புரிந்துகொண்டு இணையம் என்னும் கோப்பை gzip முறையில் மாற்றி அனுப்பும்.gzip முறையில் மாற்றுவதால் கோப்பின் அளவு மிகவும் சுருங்கும்.
- பின்வரும் தரவுகளை வழங்கி வாங்கிக்கு அனுப்பும்.